சிங்கப்பூர் exclusive
எலும்புத் தேய்மானம் - ஆரம்ப அறிகுறி என்ன?
வாசிப்புநேரம் -
படம்: envato.com
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் Osteoporosis எனும் எலும்புத் தேய்மானம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்படும் வரை இந்த நோய்க்கான அறிகுறி பெரிதாகத் தெரியாது.
அப்படித்தான் தமக்கும் இருந்ததாக 'செய்தி'யிடம் கூறுகிறார் திருமதி வசந்தகுமாரி.
"50 வயதான போது நான் அடிக்கடி கீழே விழுவேன். மருத்துவரைப் பார்த்தபோது அவர் மருந்து கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் 70 வயதான போது எனக்கு இடுப்பு வலி வந்தது. மருத்துவரைச் சென்று பார்த்தேன். ரத்தப் பரிசோதனை செய்தார்கள். எனக்கு Osteoporosis இருப்பது தெரிய வந்தது. நான் நன்றாக உடற்பயிற்சி செய்வேன் என்றாலும் இந்தப் பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. கேட்டதும் அதிர்சியாக இருந்தது" என்று கூறினார் அவர்.
சில நேரங்களில் விழும்போது ஏற்படும் எலும்பு முறிவுகள் Osteoporosis இருப்பதற்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்கிறார் எலும்பு நல மருத்துவர் சாத்தப்பன்.
"50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கை எலும்பு அதாவது மணிக்கட்டு எலும்பு முறிவு அதிகமாக இருக்கும். 60 வயது நபர்களுக்கு முதுகு எலும்பு முறிவு ஏற்படலாம். 70 வயதாவோருக்கு இடுப்பு எலும்பு முறிவு (hip fracture) ஏற்படக்கூடும். இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்க அந்தந்த வயதில் முறையாக பரிசோதனைகள் (screening) செய்ய வேண்டும்" என்றார் அவர்.
பெரிய அளவில் முறிவு ஏற்பட்டவுடன் சிகிச்சையைத் தொடங்குவதற்குப் பதில், முன்கூட்டியே எலும்புத் தேய்மானத்தைக் கண்டறியும் முன்னோடித் திட்டம் விரைவில் அதிக மருத்துவமனைகளுக்கு விரிவடையவிருக்கிறது.

ஆதாரம் : Mediacorp Seithi