எலும்பு, தசை ஆரோக்கியத்தில் கவனம் தேவை
This audio is generated by an AI tool.
Healthier SG எனும் தேசியச் சுகாதாரத் திட்டத்தின்கீழ் எலும்புத் தேய்மானச் சிகிச்சைக்குக் கட்டணம் குறையலாம்.
திட்டத்திற்குத் தகுதிபெறும் ஐந்தில் மூவர்
அதற்குப் பதிவு செய்துள்ளனர்.
சிகிச்சைக்கான தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கப் புதிதாக 38 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படுகிறது.
ஆனாலும் பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிவது முக்கியம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong ye Kung) கூறினார்.
எலும்புப் பரிசோதனைக்கு அதிகமானோர் செல்லவேண்டும் என்று திரு ஓங் சொன்னார்.
நலிவடைவதைத் தடுக்கும் சுகாதாரப் பராமரிப்பு நடைமுறைகளை உருவாக்குவதில் சுகாதார அமைச்சு மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் எலும்புத் தேய்மானப் பிரச்சினையால் அவதிப்படுவதாக அண்மை ஆய்வுகள் காட்டுகின்றன.
தசை ஆரோக்கியத்தில் மேலும் அதிகக் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்தது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திக் கருவிகளை உருவாக்கத் திட்டமுள்ளது.
கீழே விழுவதை முன்கூட்டியே கண்டறியும் உணர்கருவிகள், வீட்டிலேயே தேறிவருவதற்கு உதவும் இயந்திர மனிதக் கருவிகள் போன்றவை சில.
இதுபோன்ற கண்டுபிடிப்புகள் இன்னும் அதிகமானோர் துடிப்பாகவும் தன்னிச்சையாகவும் நீண்டகாலம் வாழக் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது.