Skip to main content
முதலைக்குச் சவால் விட்ட நீர்நாய்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

முதலைக்குச் சவால் விட்ட நீர்நாய்கள் - பரபரப்பான மோதல் காட்சி!

வாசிப்புநேரம் -
முதலைக்குச் சவால் விட்ட  நீர்நாய்கள் - பரபரப்பான மோதல் காட்சி!

படம்: Facebook/Singapore Wildlife Sightings

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஒரு முதலை...

6 நீர்நாய்கள் (Otter).

அவை மோதிக்கொள்ளும் பரபரப்பான தருணத்தின் காணொளி சமூக ஊடகத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுங்கை பூலோ (Sungei Buloh) சதுப்புநிலப் பூங்காவில் நேற்று முன்தினம் சம்பவம் நடந்தது.

காலை 7.20 மணியளவில் அந்தக் காட்சியைக் கண்டதாகக் காணொளியைப் பகிர்ந்த இணையவாசி குறிப்பிட்டார்.

முதலை அருகில் வருவதைக் கவனித்த 5 நீர்நாய்கள் உடனே அதனைச் சுற்றிவரத் தொடங்குவதைக் காணொளியில் காணமுடிகிறது.

ஒரு நீர்நாய் முதலையின் வாலை நோக்கிச் சென்றதும் முதலை அதை விரட்டச் சீறிக்கொண்டு வந்தது.

நீர்நாய் அஞ்சி தூரம் சென்றது.

சற்று நேரத்தில் 6ஆவது நீர்நாய் முதலையை நோக்கி வந்தது.

அது மற்ற 5 நீர்நாய்களுடன் இணைந்து மீண்டும் முதலையை விரட்டிச் சென்றது.

முதலை வாயை அகலத் திறந்தபடி நீர்நாய்களை விழுங்குவதுபோல விரட்டிச் சென்றது.

பதறிய நீர்நாய்கள் விலகிச் சென்றன. ஆனாலும் அஞ்சா நெஞ்சத்துடன் மீண்டும் முதலையை நோக்கிப் படையெடுத்தன.

முதலை மேற்கொண்டு மோத விருப்பமின்றி மீண்டும் நீருக்குள் மறைந்தது.

தங்களின் எல்லையைப் பாதுகாத்துக்கொண்ட மகிழ்ச்சியில் நீர்நாய்களும் நீந்திச் சென்றன.

காணொளியை இதுவரை 1,000க்கும் அதிகமானோர் கண்டுள்ளனர்.

தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீர்நாய்கள் ஒற்றுமையாகப் பயமின்றி செயல்பட்டதைப் பலர் வியந்து பாராட்டினர்.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்