Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நடமாடும் கண்காட்சியில் தேசிய தினத்தையொட்டி உடற்குறையுள்ளோர் வரைந்த ஓவியங்கள்!

வாசிப்புநேரம் -
நடமாடும் கண்காட்சியில் தேசிய தினத்தையொட்டி உடற்குறையுள்ளோர் வரைந்த ஓவியங்கள்!

Facebook/Halimah Yacob

தேசிய தினத்தை ஒட்டி, உடற்குறையுள்ளோர் வரைந்த ஓவியங்கள் நடமாடும் கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு சமூகச் சேவை அமைப்புகள், சிறப்புக் கல்விப் பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட ஓவியர்கள் அதற்குப் பங்களித்துள்ளனர்.

Our Gift to Singapore என்றழைக்கப்படும் ஓவியத் தொகுப்பு, 2020ஆம் ஆண்டிலிருந்து தேசிய தினத்தில் காணப்பட்ட வடிவங்களை எடுத்துக்காட்டுகிறது.

சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

சில வடிவங்கள் பொருள்களாகவும் உருவெடுத்துள்ளன. 

கண்காட்சியிலிருந்து பெறப்படும் நிதி, எதிர்காலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

அதிபர் ஹலிமா யாக்கோப் அந்தக் கண்காட்சியைத் திறந்துவைத்தார்.

 உடற்குறையுள்ளோர், திறன்களை வெளிக்காட்ட அத்தகைய வாய்ப்புகள் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொதுமக்கள், அடுத்த புதன்கிழமை வரை கண்காட்சியைப் பார்வையிடலாம். 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa