Skip to main content
வேக வரம்பை மீறி வாகனமோட்டியதாக 1,500 பேருக்குத் தவறாக அபராதம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வேக வரம்பை மீறி வாகனமோட்டியதாக 1,500 பேருக்குத் தவறாக அபராதம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வேக வரம்பை மீறி வாகனமோட்டியதாகச் சுமார் 1,500 பேருக்குத் தவறாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு (2025) அக்டோபர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை அந்தத் தவறு நிகழ்ந்தது.

பாதிக்கப்பட்ட வாகனமோட்டிகள் செலுத்திய அபராதம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறையும் நிலப் போக்குவரத்து ஆணையமும் தெரிவித்தன.

அவர்களுக்கு விதிக்கப்பட்ட குற்றப்புள்ளிகளும் மீட்டுக்கொள்ளப்படும்.

காலாங்-பயா லேபார் விரைவுச்சாலையில் 3 பகுதிகளில் வேகக் கண்காணிப்பு கேமராவில் வேக வரம்பு மணிக்கு 70 கிலோமீட்டர் என்று பொருத்தப்பட்டிருந்தது.

உண்மையில் அந்தப் பகுதிகளில் வேக வரம்பு மணிக்கு 80 கிலோமீட்டர்.

டிசம்பரில் வழக்கமான சோதனையின்போது அந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டது.

அது உடனே சரிசெய்யப்பட்டதாகக் காவல்துறையும் ஆணையமும் கூறின.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவெங்கும் உள்ள மற்ற வேகக் கண்காணிப்புக் கேமராக்களும் சோதிக்கப்பட்டதாக அவை தெரிவித்தன.

பாதிக்கப்பட்ட வாகனமோட்டிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.

போக்குவரத்துக் காவல்துறை அவர்களைத் தொடர்புகொள்ளும்.

போக்குவரத்துக் காவல்துறையும் ஆணையமும் நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டன.

பாதிக்கப்பட்டோருக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் Singapore Police Force feedback தளம் வழி போக்குவரத்துக் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்