Skip to main content
தொடக்கநிலை ஒன்று
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தொடக்கநிலை ஒன்று - இடங்கள் குறைகிறது

வாசிப்புநேரம் -
தொடக்கநிலை ஒன்று - இடங்கள் குறைகிறது

கோப்புப் படம்: Facebook/Chan Chun Sing

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் தொடக்கநிலை முதலாம் வகுப்பு பதிவுக்கான 2A கட்டத்தில் சுமார் 850 இடங்கள் குறைவாக இருக்கும்.

கல்வி அமைச்சு அதனைத் தெரிவித்தது.

முன்னதாக, பெரும்பாலான பள்ளிகளில் தொடக்கநிலை முதலாம் வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான எண்ணிக்கையை அமைச்சு குறைத்தது.

அடுத்த ஆண்டும் அதற்குப் பிறகும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவது அதற்குக் காரணம்.

Canossa Catholic தொடக்கப்பள்ளியில் மொத்தம் 120 இடங்கள் இருக்கின்றன.

தற்போது அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் உடன்பிறப்புகள் முதற்கட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

அதில் பாதி இடம் நிரம்பியது.

மீதமுள்ள இடங்கள் 2B, 2C கட்டங்களுக்கு ஒதுக்கப்படும்.

அதனால் அந்தப் பள்ளி 2A கட்டத்தில் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை.

பொதுவாக முன்னாள் மாணவர்களின் பிள்ளைகளுக்கு 2A கட்டம் ஒதுக்கப்படுவதுண்டு.

பள்ளி ஊழியர்களின் பிள்ளைகளும் கல்வியமைச்சின் பாலர்பள்ளியில் படித்தவர்களும் அந்தக் கட்டத்தில் சேர்க்கப்படலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்