Skip to main content
9,200க்கு மேற்பட்ட மின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

9,200க்கு மேற்பட்ட மின்-சிகரெட் கலன்கள் பறிமுதல் - 25 வயது ஆடவர் கைது

வாசிப்புநேரம் -
9,200க்கு மேற்பட்ட மின்-சிகரெட் கலன்கள் பறிமுதல் - 25 வயது ஆடவர் கைது

படம்: Immigration and Checkpoints Authority

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

9,200க்கும் மேற்பட்ட மின்-சிகரெட் கலன்களைக் கடத்த முயன்ற சந்தேகத்தில் 25 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

செப்டம்பர் 17ஆம் தேதி பாசிர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் அந்தக் கலன்கள் பிடிபட்டதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவை கூட்டாக அறிவித்தன.

மின் சிகரெட் கலன்கள் வைக்கப்பட்டிருந்த சரக்குக் கொள்கலனில் மின்னூட்டச் சாதனம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

ஆணையமும் காவல்துறையும் சேர்ந்து சம்பந்தப்பட்ட ஆடவரைப் பிடித்தன.

மேல் விசாரணைக்குப் பின்னர் அவரிடம் மேலும் 85 மின்-சிகரெட்களும் அவற்றின் பாகங்களும் இருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு 51,000 வெள்ளிக்கும் அதிகம்.

மின்-சிகரெட்களையும் அவற்றின் பாகங்களையும் இறக்குமதி செய்வதும், விற்பதும் குற்றம்.

முதன்முறை குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10,000 வெள்ளி அபராதம், 6 மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மீண்டும் மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் அதிகபட்சம் 20,000 வெள்ளி அபராதம், ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மின்-சிகரெட்களைப் பயன்படுத்துவோருக்கும் கடும் தண்டனை விதிக்கப்படும். மறுவாழ்வுப் பயிற்சிகளுக்குக் கட்டாயம் செல்லவேண்டும். செல்லத் தவறினால் குற்றவியல் வழக்குத் தொடுக்கப்படும்.

மூன்றாவது முறை அல்லது அதற்கு மேல் மின்-சிகரெட்களைப் பயன்படுத்தினால் 2,000 வெள்ளிவரை அபராதமும் விதிக்கப்படும்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்