சிங்கப்பூர் சூதாட்டக் கூடத்திற்குச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதா?
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் சூதாட்டக் கூடத்திற்குச் செல்பவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு அதிகரித்துள்ளது.
சென்ற ஆண்டு 1.4 மில்லியன் பேர் சூதாட்டக் கூடத்திற்குச் சென்றனர்.
2023ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது அது சுமார் 11 விழுக்காடு அதிகம்.
சென்ற ஆண்டு சூதாட்டக் கூடத்திற்குச் சென்றோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு உள்துறை அமைச்சர் கா சண்முகம் எழுத்துவடிவில் பதிலளித்தார்.
ஒட்டுமொத்த எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் சூதாட்டக் கூடத்திற்குச் சென்ற சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை குறைந்தது.
அந்த எண்ணிக்கை 99,000-லிருந்து 94,000க்கு இறங்கியது.
அதற்கான காரணம் உள்துறை அமைச்சுக்குத் தெரியவில்லை.
சென்ற ஆண்டு அதிகமான வெளிநாட்டினர் சூதாட்டக் கூடத்திற்குச் சென்றதால் எண்ணிக்கை கூடியது என்று கூறப்பட்டது.

ஆதாரம் : Others