Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாடாங் திடல், தேசிய நினைவுச் சின்னமாக நாளை அரசிதழில் சேர்க்கப்படும்

வாசிப்புநேரம் -
பாடாங் திடல், தேசிய நினைவுச் சின்னமாக நாளை அரசிதழில் சேர்க்கப்படும்

(படம்: SCC website)

பாடாங் திடல், தேசிய நினைவுச் சின்னமாக நாளை (9 ஆகஸ்ட்) அரசிதழில் சேர்க்கப்படும். 

தேசிய, வரலாற்று, சமூக முக்கியத்துவத்தின் அடிப்படையில் அது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுவதாக தேசிய மரபுடைமைக் கழகம் சொன்னது.

திறந்தவெளிப் பசுமை இடம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை.

தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுவதன் மூலம் பாடாங்கின் தன்மையும் தோற்றமும் வருங்காலத் தலைமுறைகளுக்கெனப் பாதுகாக்கப்படும் என்று கழகம் சொன்னது.

1822-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அந்த திடலில், சிங்கப்பூரின் முதல் தேசிய தின அணிவகுப்பு 1966-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

சிங்கப்பூரில் ஏற்கெனவே 74 தேசிய நினைவுச் சின்னங்கள் உள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்