பிள்ளைகளுக்கு மற்ற இனங்களைப் பற்றிய புரிதலைக் காற்பந்து வழி புகட்டும் முயற்சி
பிள்ளைகளுக்கு மற்ற இனங்களையும் கலாசாரங்களையும் பற்றிய புரிதலைக் காற்பந்து வழி புகட்டும் முயற்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யுரேஷியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள காற்பந்து முகாம் அதற்கு வழிவகுக்கும்.
இன்று (21 ஜூன்) அந்த மூன்று நாள் முகாம் தொடங்கியது.
சிண்டா, மெண்டாக்கி ஆகியவை இணைந்து வழங்கும் முகாமில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பங்கேற்கின்றனர்.
Lion City Sailors காற்பந்துப் பள்ளியிலுள்ள பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டுதல் வழி, பிள்ளைகள் மேலும் நெருக்கமான தொடர்பையும் மற்றவர்களின் கலாசாரம் குறித்து மேம்பட்ட புரிதலையும் பெறுவார்கள் என்பது ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கை.
காற்பந்து முகாமில் 6 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட 33 பிள்ளைகள் பங்கேற்கின்றனர்.