சிங்கப்பூரில் 140 மில்லியன் வெள்ளிச் செலவில் உருவாகும் உற்பத்தி ஆலை
(படம்: Facebook/Pall Corporation)
அமெரிக்காவின் Pall Corporation நிறுவனம் சிங்கப்பூரில் 140 மில்லியன் வெள்ளிச் செலவில் புதிய உற்பத்தி ஆலையைக் கட்டவிருக்கிறது.
இவ்வட்டாரத்தின் பகுதி மின்கடத்தித் துறைக்கு ஆதரவாக அது செயல்படும்.
300 புதிய வேலை வாய்ப்புகளை அது உருவாக்கும்.
2024-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஆலை தயாராகும்.
அப்போது அதன் உற்பத்தி அளவு, இப்போதிருப்பதைப் போன்று இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (30 ஆகஸ்ட்) நடைபெற்ற நிலந்திருத்தும் நிகழ்ச்சியில் வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் (Alvin Tan) கலந்துகொண்டார்.
பகுதி மின்கடத்தித் துறையின் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் பற்றி அவர் பேசினார்.
உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 22 விழுக்காட்டுக்கும் மேல் உற்பத்தித் துறையைச் சார்ந்திருப்பதை அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும் உற்பத்தித் துறையில் சிங்கப்பூரின் முன்னிணியைத் தக்கவைப்பதும் முக்கியம் என்று திரு. டான் சொன்னார்.