சிங்கப்பூர் exclusive
உற்சாகம் குறையாத பக்தர்கள்...வண்ணக் காவடிகளின் அணிவகுப்பு எனக் களைகட்டும் பங்குனி உத்திரத் திருவிழா
வாசிப்புநேரம் -
யீஷூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்துக்குப் பக்தர்கள் தொடர்ந்து சென்றவண்ணம் இருக்கின்றனர்.
வார நாள் என்றாலும் பக்தர்கள் காலையிலிருந்து இந்த நேரம் வரை ஆலயத் திருவிழாவில் மிக உற்சாகமாய்ப் பங்கெடுத்துவருவதாகப் பங்குனி உத்திரம் 2023 இன் ஏற்பாட்டுச் செயலாளர் திரு. சசிதரன் நாயர் 'செய்தி' இடம் சற்றுமுன்னர் தெரிவித்தார்.
பிற்பகல் 3.15 மணி நிலவரப்படி சுமார் 1,500 பால்குடங்கள் செலுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் மாலை
6 மணிவரை பால்குடங்களைச் செலுத்தலாம் என்று திரு.சசிதரன் சொன்னார். இந்த இடைப்பட்ட நேரத்தில் இன்னும் ஏறக்குறைய 100 பால்குடங்கள் வர வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, இரவில் வண்ணக் காவடிகளின் அணிவகுப்பைப் பக்தர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் திரு.சசிதரன் சொன்னார். அந்தக் காவடிகளைக் காண்பதற்காகவே பலர் திரள வாய்ப்புண்டு; சுமார் 120 காவடிகளை எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.
நண்பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணிகள் மிகவும் சுமுகமாக நடைபெற்றதையும் அவர் சுட்டினார். தயார்செய்யப்பட்ட உணவுகள் பக்தர்களுக்குப் போதிய அளவில் இருந்தன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழு வீச்சில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவில் பக்தர்கள் நல்ல ஒத்துழைப்பை வழங்கிவருவதாகவும் திரு.சசிதரன் சொன்னார்.
காலையில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Yee Kung), செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் ஆகியோரும் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டின் திருவிழா தங்களுக்குப் புதுவித உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சில பக்தர்கள் 'செய்தி' இடம் தெரிவித்தனர்.

படங்கள்: சவுரியம்மாள் ராயப்பன்
ஆதாரம் : Mediacorp Seithi