Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"பங்குனி உத்திரத் திருவிழாவின் தொண்டூழியர்களையும் கவனித்துக்கொள்ளவேண்டும்"

வாசிப்புநேரம் -
யீஷூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

திருவிழாவில் சுமார் 150 தொண்டூழியர்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

அவர்கள் காவடி, பால்குட ஊர்வலம் தொடர்பான வேலைகளுக்கு உதவி செய்தனர்.

அதோடு அவர்கள் கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் கைகொடுத்தனர்.

பக்தர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யத் துணைபுரியும் தொண்டூழியர்களின் நலனில் இவ்வாண்டு கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக ஏற்பாட்டுக் குழு 'செய்தி'யிடம் கூறியது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்