Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஹவ்காங் PAP தொண்டூழியர்களைத் தள்ளிவிட்டதுடன் கட்சிக் கொடிகளைக் கிழித்ததாக ஆடவர் மீது சந்தேகம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹவ்காங் மக்கள் செயல் கட்சி ஆர்வலர்கள் வன்முறைக்கு ஆளானதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஹவ்காங் தனித்தொகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் 2 தொண்டூழியர்களை ஒருவர் தள்ளிவிட்டதாக நம்பப்படுகிறது.

ஹவ்காங் அவென்யூ 5இல் புளோக் 328இல் இருந்த வாகனத்துடன் இணைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடிகளையும் பதாகைகளையும் அவர் கிழித்ததாகவும் காவல்துறையினர் நம்புகின்றனர்.

என்ன நடந்தது என்பதைக் கண்டறிய தாம் சென்றிருந்ததால் பிடோக் விளையாட்டரங்கத்துக்குச் செல்ல தாமதமடைந்ததாக அக்கட்சி வேட்பாளர் மார்ஷல் லிம் கூறினார்.

காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்துகின்றனர்.

ஹவ்காங் தனித்தொகுதி 1991ஆம் ஆண்டிலிருந்து பாட்டாளிக் கட்சியின் வசம் உள்ளது.

இந்தப் பொதுத்தேர்தலில் திரு டென்னிஸ் டான் 62.17 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று அங்கு வென்றார். 

முந்தைய தேர்தலில் கிடைத்த 61.21 விழுக்காட்டு வாக்குகளுடன் ஒப்பிடுகையில் அது சற்று அதிகம். 

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்