Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை: மக்கள் செயல் கட்சியின் புதுமுகம் கவால் பால் சிங்

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை: மக்கள் செயல் கட்சியின் புதுமுகம் கவால் பால் சிங்

படம்: CNA/Wallace Woon

மக்கள் செயல் கட்சியின் புதுமுகங்களில் ஒருவரான வழக்கறிஞர் கவால் பால் சிங் (Kawal Pal Singh) வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார்.

இப்போதைக்கு வேலையிலும் குடும்பத்திலும் கவனம் செலுத்த விரும்புவதாக 41 வயதுடைய திரு கவால் சொன்னார்.

அதன் தொடர்பில் அவர் நேற்று Instagram செயலியில் பதிவிட்டார்.

மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
இந்தர்ஜித் சிங்கின் (Inderjit Singh) உறவினரான திரு கவால் அண்மையில் தோ பாயோ வெஸ்ட் ஈரச்சந்தையிலும் உணவங்காடி நிலையத்திலும் கட்சியின் தொகுதி உலாவில் கலந்துகொண்டார்.

இதையடுத்து அவர் பொதுத்தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று பேசப்பட்டது.

ஆனால் அவர் அதனை மறுத்துள்ளார்.

கட்சிக்குத் தமது ஆதரவு தொடரும் என்றார் அவர்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்