Skip to main content
பொதுத்தேர்தல் 2025: மக்கள் செயல் கட்சியின் புதிய முகங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2025: மக்கள் செயல் கட்சியின் புதிய முகங்கள்

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2025:  மக்கள் செயல் கட்சியின் புதிய முகங்கள்

திரு லிம் பியாவ் சுவானுடன் மக்களைச் சந்திக்கும் திருவாட்டி கோ ஸீ கீ (படம்: Facebook/Lim Biow Chuan)

சிங்கப்பூரின் 14ஆம் பொதுத்தேர்தல் இவ்வாண்டு நடைபெறவிருக்கிறது.

தேர்தல் தொகுதி எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

புதிய முகங்களைக் காண முடிகிறது.

இதுவரை எந்தக் கட்சியும் வேட்பாளர் பட்டியலை இன்னமும் உறுதிசெய்யவில்லை.

ஆரம்பத்தில் ஜாலான் புசார் மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவாவுடன் (Denise Phua) காணப்பட்ட திரு டேவிட் ஹோ (David Hoe) அண்மையில் தெம்பனிஸ் உறுப்பினர்களுடன் காணப்பட்டார்.

பதிவுசெய்யப்பட்ட Majurity Trust அறநிறுறுவனத்தின் கொடைப்பிரிவுத் தலைவர்.

கல்வியில் எதிர்நோக்கிய சவால்களை வெற்றியாக மாற்றியவர்.

திரு ஹோ முன்பு ஆசிரியராகவும் பணியாற்றினார்.

மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களுடன் காணப்பட்ட மற்றொரு முக்கியமானவர் திருவாட்டி கோ ஸீ கீ (Gho Sze Kee).

நீண்டநாள் கட்சித் தொண்டூழியராக இருக்கும் அவர் 2021ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சி மாநாட்டில் பெயர் பதித்தார்.

கட்சிக்குள் கூடுதலான பலதரப்பட்ட யோசனைகளுக்கு அவர் அழைப்புவிடுத்தார்.

கப்பல்துறை வழக்கறிஞரான திருவாட்டி கோ மவுண்ட்பேட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியாவ் சுவானுடன் (Lim Biow Chuan) பல்வேறு இல்ல வருகைகளிலும் சமூக நிகழ்ச்சிகளிலும் காணப்பட்டார்.

2023இல் அடித்தளப் பணிக்காக அவருக்குப் பொதுச்சேவைப் பதக்கம் வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணப்படும் மற்றொரு பிரபலம் திருவாட்டி ஹஸ்லினா அப்துல் ஹலிம் (Hazlina Abdul Halim).

முன்னாள் மீடியாகார்ப் செய்திப் படைப்பாளர், செய்தியாசிரியர்.

இப்போது Make A Wish அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.

மெண்டாக்கி போன்ற அமைப்புகளில் நிர்வாக வாரிய உறுப்பினர்.

முன்பு சிங்கப்பூர் முஸ்லிம் மாதர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

முன்பு செய்தி நிருபராக இருந்த அவர் அடிக்கடி மெக்பர்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங்குடனும் மரீன் பரேட் குழுத்தொகுதி உறுப்பினர்கள் எட்வின் தோங் (Edwin Tong), டான் சீ லெங் (Tan See Leng) ஆகியோருடனும் காணப்படுகிறார்.
 
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்