Skip to main content
PSP, PAP தொண்டூழியர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

PSP, PAP தொண்டூழியர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு

வாசிப்புநேரம் -
 PSP, PAP தொண்டூழியர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு

Facebook/S Nallakaruppan, Low Yen Ling

சிங்கப்பூரின் புக்கிட் கோம்பாக் வட்டாரத்திற்குச் சென்ற சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (PSP) தொண்டூழியர்களுக்கு மக்கள் செயல் கட்சியின் (PAP) தொண்டூழியர்கள் தொந்தரவு கொடுத்ததாக PSP கூறியிருக்கிறது.

புக்கிட் கோம்பாக் வட்டாரத்தில் உள்ள Goodview Gardensஇல்
PSP தொண்டூழியர்கள் வட்டாரவாசிகளுக்கு அறிக்கைகளைக் கொடுத்தபோது PAP தொண்டூழியர்கள் அவர்களைப் பின்தொடர்ந்ததாக PSP கட்சியைச் சேர்ந்த திரு நல்லகருப்பன் சொன்னார்.

PSP தொண்டூழியர்கள் அவர்களை நிறுத்தும்படி பணிவாகக் கேட்டுக்கொண்டதாகவும் அவர்களை வேறு இடங்களுக்குச் செல்லும்படி சொன்னதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கு PAP தொண்டூழியர்கள் அது தங்களுக்கு உரிய இடம் என்று கூறியதாகத் திரு நல்லகருப்பன் சொன்னார்.

அதனை மக்கள் செயல் கட்சி மறுத்துள்ளது.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நடந்ததை மாற்றிச் சொன்னதாக PAPஇன் லோ யென் லிங் Facebookஇல் குறிப்பிட்டார்.

PAPஇன் இரு ஆண் தொண்டூழியர்கள் தவறாகக் கையாளப்பட்டதை அறிந்து கவலையடைந்ததாகத் தெரிவித்தார் திருவாட்டி லோ.

சம்பவம் குறித்து PSP கட்சி தங்கள் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதோடு காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாக அவர் சொன்னார்.

காவல்துறையின் விசாரணைக்காகக் காத்திருப்பதாகவும் அதன்வழி முழு விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரியவரும் என்றும் திருவாட்டி லோ சொன்னார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்