சிங்கப்பூர் exclusive
அனைத்து ஊழியர்களையும் பாதுகாப்போம்; அஞ்ச வேண்டாம்: துணைப்பிரதமர் கான்
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த வரிகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் தமது பணிக்குழு நடத்தியுள்ள பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகத் துணைப்பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
பொங்கோல் குழுத்தொகுதிக்கான இன்றைய மக்கள் செயல் கட்சி பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார்.
"அனைத்து ஊழியர்களையும் பாதுகாப்போம்; அஞ்ச வேண்டாம்"
என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை குறித்தும் பணிக்குழுவின் திட்டங்கள் பற்றிய கூடுதல் விவரங்களும் விரைவில் பகிரப்படும் என்றார்.
பொங்கோல் குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி அணியில் புதிதாக இணைந்துள்ள அவருக்கு மக்கள் அன்பான வரவேற்பைத் தந்திருப்பதாக அவர் சொன்னார்.
மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் தலைமையில் பொங்கோல் வட்டாரம் அடைந்துள்ள வளர்ச்சியைத் தொடர அவர் உறுதியளித்தார்.
குடும்பங்களுக்கு ஏற்ற மகிழ்வான வாழ்க்கைச் சூழல், புதிய பள்ளிகள், பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தின் மூலம் சுமார் 20,000 கூடுதல் வேலைகள் ஆகியவற்றை உருவாக்க அவரது அணி உழைக்கும் எனக் கூறினார்.
கட்சியின் பொங்கோல் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு தர வந்த மூத்த அமைச்சர் தியோ பிற நாடுகளில் நடக்கும் பூசல்களால் சிங்கப்பூரின் பல்லின சமுதாயத்தில் பிளவு ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தினார்.
உலகளவில் நிலவும் புதிய சவால்களால் ஏற்படக்கூடிய தாக்கத்தைச் சமாளிக்க அனுபவம் மிக்க மக்கள் செயல் கட்சியனருக்கு ஆதரவு தருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
யூசோப் இஷாக் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அந்தப் பிரசாரக் கூட்டதில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டனர்.