Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

PSP தொண்டூழியர்களுடன் தகராறு - காணொளியைப் பதிவிட்ட PAP தொண்டூழியர்

வாசிப்புநேரம் -
மக்கள் செயல் கட்சியின் (PAP) தொண்டூழியர் ஒருவர், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (PSP) தொண்டூழியர்களுடன் நடந்த தகராறு குறித்து இரண்டு காணொளிகளைப் பதிவேற்றம் செய்துள்ளார்.

இரு கட்சிகளுக்கும் இடையே அது குறித்துக் கருத்து வேறுபாடு நிலவியது.

புக்கிட் கோம்பாக்கில் மக்களைச் சந்திக்கச் சென்றபோது PAP தொண்டூழியர்கள் தங்களைப் பின்தொடர்ந்ததாக PSP கூறியது.

அது குறித்து நேற்று முன்தினம் (8 ஜனவரி) நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி லோ யென் லிங் (Low Yen Ling) Facebookஇல் பதிவிட்டிருந்தார்.

அஸ்மான் இப்ராஹிம் (Azman Ibrahim) என்பவர் பகிர்ந்துகொண்ட காணொளியில், PSP சட்டையை அணிந்திருக்கும் ஆடவர் அவருடன் படமெடுக்க முயல்வதைக் காணமுடிகிறது. அதன் பின் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

காணொளியின் இறுதிப் பகுதியில் PSP சட்டையை அணிந்திருக்கும் மற்றொருவர் திரு அஸ்மானைக் கடந்துசெல்கிறார். அவர் தம்மை அரைந்ததாகத் திரு அஸ்மான் காணொளியில் சொல்கிறார். அவர்கள் சண்டையிட்டதாகக் காணொளிக் குறிப்பில் பதிவிடப்பட்டிருந்தது.

மற்றொரு காணொளியில், வெண்ணிற உடையில் இருக்கும் பெண்ணைச் சுற்றி PSP சட்டை அணிந்திருப்போர் இருக்கின்றனர். PSP சட்டையை அணிந்திருக்கும் பெண் கேமராவை நோக்கி நடப்பது தெரிகிறது. அவரது முகம் மிக அருகில் காணப்படுகிறது. அதன் பின் கேமராவை PSP தாள்கள் மறைக்கின்றன.

காணொளியை எடுப்பவர் பின்னோக்கி நடக்கும்போது, PSPஇன் பெண் தொண்டூழியர் அவரை நோக்கி நடந்து கேமராவை மறைக்க முயல்கிறார்.

திருவாட்டி லோவின் பதிவில் அவர் குறிப்பிட்ட முதல் ஆண் தொண்டூழியர் தாமே என்று திரு அஸ்மான் சொன்னார்.

தம்மைக் காட்டும் படங்களும் காணொளிகளும் இணையத்தில் பகிரப்படுவதைக் கண்டு கவலையுற்றதாகத் திரு அஸ்மான் கூறினார். பலர் அவரிடம் PSP சொன்னது உண்மையா என்றும் கேட்டனர். அதனால் காணொளிகளைப் பதிவிட முடிவெடுத்ததாக அவர் சொன்னார்.

PSP தொண்டூழியர்கள் கைகலப்பில் ஈடுபடுவார்கள் என்று தாம் எதிர்பார்க்கவில்லை எனத் திரு அஸ்மான் கூறினார்.

காவலுறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்