Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் எங்கள் முயற்சியும் கடுமையாக இருக்கிறது" - அல்ஜுனிட் குழுத்தொகுதியில் PAP அணி

வாசிப்புநேரம் -
அல்ஜுனிட் (Aljunied) குழுத்தொகுதியில் களமிறங்கும் மக்கள் செயல் கட்சி (PAP) அணி இன்று காலை சிராங்கூனில் தொகுதி உலா வந்தது.

காலை 8.30 மணிவாக்கில் சிராங்கூன் நார்த் சந்தைக்கும் உணவங்காடி நிலையத்துக்கும் அவர்கள் வந்தனர்.

அவர்களுடன் கட்சியின் தொண்டூழியர்கள் பலரும் இருந்தனர்.
(படம்: CNA/Clemens Choy)
மக்களைச் சந்தித்துப் பேசிய அவர்கள், துண்டுப் பிரசுரங்களையும் பிரசாரக் கையேடுகளையும் கொடுத்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசினர்.

"அல்ஜுனிட் குழுத்தொகுதி மக்களின் குரலாக இருக்க விரும்புகிறோம்" என்று சிராங்கூன் கிளைத் தலைவர் சான் ஹுய் யு (Chan Hui Yuh) சொன்னார்.
 
(படம்: CNA/Clemens Choy)
தொகுதியில் பாட்டாளிக் கட்சியுடன் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் தங்களது முயற்சிகளும் தீவிரமடைந்திருப்பதாக அவர் சொன்னார்.

"மக்களுடன் இயன்றவரை நெருங்கமாக இருக்க முயன்று வருகிறோம். அதற்காகக் காலை முதல் இரவு வரை ஒவ்வொரு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரங்களைச் செய்துவருகிறோம்" என்று திருவாட்டி சான் சொன்னார்.

அணியிலுள்ள புதுமுகங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர்.
(படம்: CNA/Clemens Choy)
நடப்புத் தலைமைத்துவத்துக்கு ஈடுகொடுத்து மக்களுக்குச் சேவையாற்றுவதை அணி எவ்வாறு உறுதிசெய்கிறது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த திருவாட்டி சான், அணியில் வெவ்வேறு வயதினரும் வெவ்வேறு துறையினரும் இருப்பதைச் சுட்டினார்.
(படம்: CNA/Clemens Choy)
அனைவருக்கும் வெவ்வேறு அனுபவங்களும் இருக்கின்றன. இவற்றுடன் சேர்த்து இளையர்களின் பலம் தங்களுக்குப் பக்கபலமாக இருப்பதாய் அவர் சொன்னார்.

அல்ஜுனிட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றன.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்