Skip to main content
மூத்தோரின் தனிமையைப் போக்க புதிய முயற்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மூத்தோரின் தனிமையைப் போக்க புதிய முயற்சி

வாசிப்புநேரம் -
மூத்தோரின் தனிமையைப் போக்க புதிய முயற்சி

படம்: www.pap.org.sg

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மக்கள் செயல் கட்சி - மூத்தோரின் தனிமையைப் போக்க உதவும் முயற்சியில் ஈடுபடவிருக்கிறது.

தொண்டூழியர்களும் ஆர்வலர்களும் மூத்தோருடன் அதிகம் கலந்து பழக அது பயிற்சி வழங்கும்.

மக்கள் செயல் கட்சியின் 9 கிளைகளில் ஓராண்டு முன்னோட்டத் திட்டம் தொடங்கும்.

பிடோக், அங் மோ கியோ, தோ பாயோ உள்ளிட்ட பழைய குடியிருப்புப் பகுதிகளிலும் அந்தத் திட்டம் இடம்பெறும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டூழியர்களுக்கு
மூத்தோருடன் பழகுவதற்கான பயிற்சி வழங்கப்படும்.

அரசாங்க அமைப்புகள், வசதிகள், வளங்கள் ஆகிவற்றில் தேவையான உதவிகளைப் பெற தொண்டூழியர்கள் மூத்தோருக்கு வழிகாட்டுவர்.

வாராந்திர மக்கள் சந்திப்பு, வீடுகளுக்குச் சென்று சந்திப்பது முதலிய வழிகளில் தொண்டூழியர்கள் ஏற்கனவே அவர்களுடன் கலந்து பழகுகின்றனர்.

அதனால், தனிமையில் இருக்கும் மூத்தோரை அடையாளம் கண்டு அவர்கள் எங்கே உதவி பெறலாம் என்று வழிகாட்டுவது எளிதாகும்.

வேலைக்குச் செல்வதன் மூலம் தனிமையைப் போக்க விரும்பும் மூத்தோருக்கு உரிய உதவி வழங்கும் வழிகளையும் அரசாங்கம் ஆராய்கிறது.

"மூத்தோருக்கு பகுதிநேர வேலை செய்ய வேண்டும் என்ற ஓர் ஆர்வம் இருக்கிறது என்பதை அறிவோம். அதனையொட்டி, மனிதவள அமைச்சு இந்த விஷயத்தை நன்றாக ஆராய்ந்து, மூத்தோருக்கு எப்படி வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் என்பதைப் பற்றி கலந்துரையாடும்" என்று மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கூறினார்.

மூத்தோருக்கு உதவ அரசாங்கம் தேசிய அளவில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.

வெவ்வேறு பகுதிகளில் வசிப்போரின் தேவைக்கு ஏற்ப உதவி வழங்க அது வழியமைக்கிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்