Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் பேருந்தில் ஊர்வலம்

வாசிப்புநேரம் -

உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சிங்கப்பூர் வீரர்கள் பேருந்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
 
OCBC நீர் விளையாட்டு நிலையத்திலிருந்து முற்பகல் 11.30 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது. 

உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட 10 வீரர்கள் கூரையில்லாப் பேருந்தில் நகரின் முக்கியப் பகுதிகளை வலம் வருகின்றனர். 

நீச்சலில் தங்கம் வென்று தந்த யிப் பின் சியூ (Yip Pin Xiu), போச்சா (Boccia) எனும் ஒருவகை உருட்டுப்பந்து விளையாட்டில் வெள்ளி வென்ற ஜெரலின் டான் (Jerayn Tan) உள்ளிட்டவர்களும் பேருந்தில் உள்ளனர். 

கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் தோங்  ஊர்வலத்தைத் தொடங்கிவைத்தார். 

சைனாடவுன், ஆர்ச்சர்ட் ரோடு, சிராங்கூன் ரோடு, விக்டோரியா ஸ்ட்ரீட் ஆகிய பகுதிகளை ஊர்வலம் கடந்துசெல்லும். 

உடற்குறையுள்ள வீரர்கள் எளிதில் ஏறி இறங்குவதற்கு வசதியாகப் பேருந்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்