PARF தொகை குறைப்பு - கார் வாங்குவோருக்குப் பாதிப்பு?
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் PARF எனப்படும் வாகனங்களின் பதிவு ரத்துக்குக் கிடைக்கும் தொகை குறைக்கப்பட்டுள்ளதால் வாகன உரிமைச் சான்றிதழின் புதுப்பிப்பு பாதிக்கப்படும் சாத்தியம் குறைவு என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் (Jeffrey Siow) தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தால் ஈராயிரத்துக்கும் குறைவான கார் வாங்குவோர் பாதிக்கப்பட்டிருப்பதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட தொகையால் கார் விலையும் அவற்றுக்கான தேவையும் பாதிக்கப்படுமா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துப் பேசினார்.
மின் கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மற்ற கார்களை முன்கூட்டியே விற்பதை ஊக்குவிக்கப் புதிய திட்டம் உதவும் என்றார் திரு சியாவ்.

ஆதாரம் : Mediacorp Seithi