சிங்கப்பூர் exclusive
சமூக நல்லிணக்கத்தைச் சாதாரணமாக எண்ணக் கூடாது: அமைச்சர் சண்முகம்
வாசிப்புநேரம் -
படம்: அனு அருணாச்சலம்
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் நிலவும் இன, சமய நல்லிணக்கத்தைச் சாதாரணமாக எண்ணக் கூடாது என்று உள்துறை அமைச்சர் கா சண்முகம் கூறியுள்ளார்.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் அமைந்திருக்கும் கிறிஸ்து சேகர சபையின் (Parish of Christ Church) 85ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தில் அவர் பேசினார்.
சட்டம் அமைதியைக் காக்கும்; சமூக, சமய தலைவர்கள் மக்களை ஒன்றிணைக்கவேண்டும் என்று திரு சண்முகம் கூறினார்.
தேவாலயத்தின் நற்பணிகள் சிங்கப்பூரர்களிடையே ஒருமைப்பாட்டைப் பேண உதவுகின்றன என்றார் அமைச்சர்.
நேற்றிரவு கரையோரப் பூந்தோட்டத்தில் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர் சண்முகம், கலாசார, சமூக, இளையர் துணையமைச்சர் ஆல்வின் டான் (Alvin Tan) இருவரும் கலந்துகொண்டனர்.
சிண்டா, ஸ்ரீ நாராயண மிஷன் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் வருகை தந்தனர்.
நிகழ்ச்சியில் பிரார்த்தனை, ஆடல், பாடல் உள்ளிட்ட பல அங்கங்கள் இடம்பெற்றன.
கிறிஸ்து சேகர சபை டோர்செட் ரோட்டில் (Dorset Road) அமைந்திருக்கிறது.
நீண்ட வரலாறு கொண்ட தேலாலயம் அது என்று பாதிரியார் ஸ்டீவன் ஆசீர்வாதம் விவரித்தார்.
1940ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் ஆங்கிலிக்கன் சபை அது.
இரண்டாம் உலகப் போரின்போது மூன்று நாள் பீரங்கித் தாக்குதலுக்கு இலக்கானது தேவாலயம்.
கடுமையாகச் சேதமுற்ற தேவாலயம் பின்னர் 1960களின் ஆரம்பத்தில் மறுசீரமைக்கப்பட்டது.
தேவாலயம் சிங்கப்பூரின் தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்று.

ஆதாரம் : Mediacorp Seithi