9 மணி நேரம் நீண்ட விவாதம்... திருத்தப்பட்டது பொருளாதாரத் தீர்மானம்
வாசிப்புநேரம் -
படம்: CNA/Syamil Sapari
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் எதிர்காலப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான தீர்மானத்தைச் சில மாற்றங்களுடன் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
ஒன்பது மணி நேரம் விவாதம் நடந்தது.
பாட்டாளிக் கட்சி தீர்மானத்தை முன்வைத்திருந்தது.
தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பேசிய பாட்டாளிக் கட்சி உறுப்பினர்கள் இளையர்களுக்கும் உள்ளூர் நிறுவனங்களுக்கும் அதிக வாய்ப்புகள் தேவை என்று அறைகூவல் விடுத்தனர்.
பொருளாதாரத்தின் அடுத்த கட்டத்தில் குடிமக்களுக்கு அதிக வாய்ப்புகள் தேவையென்று அவர்கள் கூறினர்.
அதற்குப் பதில் சொன்ன மக்கள் செயல் கட்சி, நல்ல வேலை, திறன் வளர்ச்சி, மாற்றத்தைச் சந்திப்பதற்குத் தேவையான ஆதரவு ஆகியவற்றால் பொருளாதார வெற்றியில் சிங்கப்பூரர்கள் அர்த்தமுள்ள நெடுங்காலப் பயனை அடைவதாகக் குறிப்பிட்டது.
பொருளாதார உத்தி மறுஆய்வுக்கு ஏற்ப மக்கள் செயல்கட்சி தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தது.
மொத்தம் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர்.
எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரும் திருத்தங்களை எதிர்த்து வாக்களித்தனர்.
மன்றத்தில் இருந்த நியமன உறுப்பினர்கள் அனைவரும் திருத்தப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தனர்.
வர்த்தக, தொழில் அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) திருத்தப்பட்ட தீர்மானம் சிங்கப்பூரின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA