Skip to main content
நாடாளுமன்றக் கட்டடத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நாடாளுமன்றக் கட்டடத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல்

வாசிப்புநேரம் -
நாடாளுமன்றக் கட்டடத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல்
(படம்: CNA/Syamil Sapari)
வெளியீடு : 09 Jul 2026 08:30AM புதுப்பிப்பு : 09 Jul 2026 11:17AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நாடாளுமன்றக் கட்டடத்தையும் உள்துறை அமைச்சின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பையும் குறிவைத்துப் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆடவர் மீது இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

40 வயது ஆடவர், ஆபத்தான பொய்த் தகவல் வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இம்மாதம் (ஜூலை) மூன்றாம் தேதி தனது கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாய் உள்துறை அமைச்சின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு இணையம் வழி தகவல் பெற்றது.

அதைப் பற்றி அமைப்பு காவல்துறையிடம் புகார் செய்தது.

அதே கட்டடத்தில் மீடியாகார்ப் நிறுவனமும் உள்ளது.

நான்கு நாள் கழித்து அடுத்த மிரட்டல் குறித்துத் தகவல் பெற்றதாய்க் காவல்துறை சொன்னது.

நாடாளுமன்றக் கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாகப் பிரதமர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

காவல்துறை இரு வளாகங்களையும் சோதனை செய்தது.

பாதுகாப்பு அக்கறை எழுப்பக்கூடிய எந்தப் பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இரு மிரட்டல்களையும் ஒரே நபர் அனுப்பியது உறுதிசெய்யப்பட்டது.

சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை, 50,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்