Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திரு. ஈஸ்வரனை நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலக்கக் கோரும் தீர்மானம் நிராகரிப்பு

வாசிப்புநேரம் -
திரு. எஸ். ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டால் விடுப்பில் இருக்கும்போது அவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தைத் திரும்பப் பெறுவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா அவ்வாறு கூறியுள்ளார். திரு. ஈஸ்வரனை நாடாளுமன்றத்தில் இருந்து தற்காலிகமாக விலக்கிவைப்பதற்கான தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

திரு. ஈஸ்வரனிடம் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் தற்போது அவர் விடுப்பில் உள்ளார். அவரது மாதச் சம்பளம் 8,500 வெள்ளிக்குக் குறைக்கப்பட்டுள்ளவேளையில் மன்ற உறுப்பினருக்கான படித்தொகையை அவர் பெற்றுவருகிறார்.

அந்தத் தீர்மானத்தை, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசல் புவா கொண்டுவந்தார்.

ஊழலுக்காக விசாரிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்கள் அதற்குத் தீர்வுகாணப்படும் வரை சம்பளம் இல்லா விடுப்பில் இருக்கவேண்டும் என்று அவர் கூறினார். ஊழலுக்கு எதிரான சிங்கப்பூரின் நிலைப்பாட்டில் இது முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், மன்ற உறுப்பினர்கள் சிலர் இதனை நிராகரித்தனர்.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்பது சட்டத்தின் அடிப்படைக் கொள்கை என்பதை அவர்கள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கும், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தீர்மானம் ஒரு பாதகமான முன்மாதிரியை உருவாக்கக் கூடுமென எச்சரித்தார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்