Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பகுதிநேரமாக வீட்டைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் இனி குழந்தைகள், முதியவர்களையும் பராமரிக்கலாம் - மனிதவள அமைச்சு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பகுதிநேரமாக வீட்டைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் இனி அந்த வீட்டிலுள்ள குழந்தைகளையும் முதியவர்களையும் பராமரிக்க அனுமதிக்கப்படுவர்.

பகுதிநேர வீட்டு வேலைக்கான திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதே அதற்குக் காரணம் என மனிதவள அமைச்சு கூறியது.

இதற்குமுன்னர் அந்தத் திட்டத்தின்கீழ் வீட்டைச் சுத்தம் செய்வது, கார் கழுவுவது முதலிய சேவைகள் மட்டுமே இருந்தன. ஆனால் இனி குழந்தைகளையும் முதியவர்களையும் கவனித்துக்கொள்ளும் சேவைகள் அதில் சேர்க்கப்படுகின்றன.

அதன் முன்னோடித் திட்டத்தை மனிதவள அமைச்சு நாளை புதன்கிழமை (15 மார்ச்) தொடக்கிவைக்கும்.

திட்டத்தின்கீழ் சேரும் நிறுவனங்கள் சிங்கப்பூரிலுள்ள குடும்பங்களுக்குத் தேவையான சேவைகளை வழங்க ஏதுவாக இன்னும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தலாம் என அமைச்சு தெரிவித்தது.

ஒருநாளில் அல்லது ஒரு வாரத்தில் சில மணி நேரங்களுக்கு மட்டுமே வீட்டில் அத்தகைய சேவைகள் தேவைப்படும் குடும்பங்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சு கூறியது.

இந்த முன்னோடித் திட்டத்தில் சேர 25 நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

18 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், முதியோர் ஆகியோரின் அடிப்படைத் தேவைகளைப் பராமரிக்க சிங்கப்பூர்க் குடும்பங்கள் இந்த நிறுவனங்களின் சேவையை நாடலாம் என அமைச்சு தெரிவித்தது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்