பாசிர் ரிஸ் மின்னல் சம்பவம் - பாதுகாப்பு நடைமுறைகள் மறுஆய்வு
வாசிப்புநேரம் -
படம்: CNA/Vanessa Lim
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பாசிர் ரிஸ் மின்னல் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து குறைந்தது 3 வெளிப்புற விளையாட்டு நிறுவனங்கள் அவற்றின் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (5 ஜூலை) paddleboard நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கி 24 வயது ஆடவர் மாண்டார்.
தற்போதுள்ள நடைமுறைகளின்படி
ஆபத்தான வானிலையின் முதல் அறிகுறியைக் கண்டதும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.
உச்சக்கட்ட மின்னல் எச்சரிக்கை விடுக்கப்படுவது, நடவடிக்கைகள் தொடர முடியாது என்பதற்கான தெளிவான அறிகுறி என்று நிறுவனங்கள் CNAவிடம் தெரிவித்தன.
அதிகாரத்துவ எச்சரிக்கைகளைவிடக் கடலில் நிலைமை வேகமாக மாறலாம்.
அதனால் பயிற்றுவிப்பாளர்கள் நேரில் பார்ப்பதையும் கேட்பதையும் வைத்து உடனே முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
கரையிலிருந்து 300 மீட்டருக்கும் அப்பால் இருந்தால் மின்னல் எச்சரிக்கை ஒலி கேட்காது என்று Fish On நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்தார்.
மின்னல் எச்சரிக்கை அமைப்பில் விளக்குகள் இருந்தாலும் மரங்கள் மறைப்பதால் அதைக் கடலிலிருந்து பார்க்க முடியாது என்றும் அவர் சொன்னார்.

ஆதாரம் : CNA