பாசிர் ரிஸ் கார் நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு - 3 இளையர்கள் கைது
வாசிப்புநேரம் -

(படம்: CNA/Hanidah Amin)
பாசிர் ரிஸ் கார் நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய சந்தேகத்தில் 3 இளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மீது நாளை (18 செப்டம்பர்) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
ஏனைய இருவரிடம் விசாரணை தொடர்கிறது.
திருட்டு குறித்து நேற்று முன்தினம் (15 செப்டம்பர்) காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
காவல்துறை கண்காணிப்புக் கேமராக்கள், சுற்றுப்புறக் கண்காணிப்புக் கேமராக்கள் ஆகியவற்றில் பதிவாகியிருந்த காட்சிகள் மூலம் பிடோக் காவல்துறைப் பிரிவினர் சந்தேக நபர்களை அடையாளம் கண்டனர்.
17 வயதுள்ள மூவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் தலைக்கவசமும் மீட்கப்பட்டன.