சிங்கப்பூர் trending
கழக வீட்டுக் குப்பைக் குழாயில் தீ - விரைவாக அணைத்த ஆடவர்கள்
(படம்: Instagram/sgfollowsall)
This audio is generated by an AI tool.
பாசிர் ரிஸில் (Pasir Ris) கழக வீட்டின் குப்பைக் குழாயில் மூண்ட தீயை அணைத்த ஆடவர்களுக்குப் பாராட்டு குவிகிறது.
பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 13இல் உள்ள புளோக் 150இல் தீ மூண்டது.
இரண்டு ஆடவர்கள் தீயைத் துணிச்சலாக அணைக்கும் காட்சி இணையத்தில் பரவுகிறது.
அவர்கள் தீயணைப்புக் கருவி, தண்ணீர்க்குழாய் ஆகியவற்றைப் பயன்படுத்தினர்.
சம்பவம் நேற்று முன்தினம் (22 மார்ச்) நடந்தது.
இரவு 8.30 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை 8 World செய்தியிடம் தெரிவித்தது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரையும் முன்னரே தீ அணைக்கப்பட்டது.
குடிமைத் தற்காப்புப் படை ஆடவர்களுக்கு வெகுமதி வழங்கவேண்டும் என்று சில இணையவாசிகள் கூறினர்.
தீயினால் யாருக்கும் காயமில்லை.
குப்பைக் குழாயில் கிடந்த பொருள்கள் தீப்பற்றக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. விசாரணை தொடர்கிறது.