உட்லண்ட்ஸில் விபத்து -கவிழ்ந்த லாரி, சிக்கிய பயணி
Facebook/SGRV FRONT MAN
This audio is generated by an AI tool.
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் விபத்துக்குள்ளான லாரியில் சிக்கிக்கொண்ட பயணியை அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
இன்று (14 ஜூன்) காலை சுமார் 8.50 மணியளவில் உட்லண்ட்ஸ் அவென்யூ 6க்கும் உட்லண்ட்ஸ் அவென்யூ 1க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் விபத்து நடந்தது.
இணையத்தில் பகிரப்படும் படங்களில் லாரி விளக்குக் கம்பம் மீது மோதியது என்பது தெரிகிறது.
லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து கிடக்கிறது.
அருகே பெரும் கூட்டம் தெரிகிறது. லாரியின் முன் இருக்கையில் இருந்த பயணி காயமுற்றார்.
அவர் வாகனத்தை விட்டு வெளியேறமுடியாமல் தவித்தார்.
தகவல் அறிந்த சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அவர்கள் சில கருவிகளின் உதவியுடன் பயணியை விடுவித்தனர்.
அவர் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
காயமுற்ற இன்னொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.