Skip to main content
தொலைந்த கடப்பிதழை உரிமையாளரிடம் ஒப்படைத்த வெளிநாட்டு ஊழியர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தொலைந்த கடப்பிதழை உரிமையாளரிடம் ஒப்படைத்த வெளிநாட்டு ஊழியர்

வாசிப்புநேரம் -
தொலைந்த கடப்பிதழை உரிமையாளரிடம் ஒப்படைத்த வெளிநாட்டு ஊழியர்

(படம்: facebook/steven sit)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் ஆடவர் ஒருவர் தொலைத்த கடப்பிதழை வெளிநாட்டு ஊழியர் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளார்.

உதவிய ஊழியரின் பெயர் ஆன்டனி ராஜ்.

கடப்பிதழைத் தொலைத்த ஸ்டீவன், ஆன்டனியைப் பாராட்டி Facebook பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.

கடப்பிதழில் ஸ்டீவனின் சீனப் பெயர் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது.

ஆன்டனி துப்பறிவாளர் போல் செயல்பட்டு கூகல் (Google) வாயிலாக ஸ்டீவனை அடையாளம் கண்டு தொடர்புகொண்டார்.

அவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்ட பிறகு ஸ்டீவனின் நம்பிக்கையைப் பெற ஆன்டனிக்குச் சற்று நேரம் பிடித்தது.

அவர் ஒரு மோசடிக்காரர் என்று நினைத்து ஸ்டீவன் சரிவர பதில் சொல்லவில்லை.

பின்னர் ஆன்டனி கடப்பிதழைப் படம் பிடித்து ஸ்டீவனுக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.

ஒரு மணி நேரத்தில் ஸ்டீவன் கடப்பிதழைத் திரும்பப் பெற்றார்.

அவர் மலேசியப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் உரிய நேரத்தில் கடப்பிதழ் கிடைத்ததாகவும் கூறினார்.

இனி கடப்பிதழைப் பாதுகாப்பாய் வைத்திருக்க அதில் விலங்கு அல்லது வாரை (leash) மாட்டவேண்டும் என்று ஸ்டீவன் வேடிக்கையாகக் கூறினார்.

தக்க நேரத்தில் உதவிய ஆன்டனிக்கு ஸ்டீவன் நன்றி தெரிவித்தார்.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்