Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஒளிபரப்புத் துறையில் தடம் பதித்த பவளகாந்தம் அழகர்சாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

வாசிப்புநேரம் -
ஒளிபரப்புத் துறையில் தடம் பதித்த பவளகாந்தம் அழகர்சாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
படம்: மீடியாகார்ப்
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மீடியாகார்ப்பின் பிரதான விழா 2026இல் மூத்த செய்தி ஆசிரியர் திருமதி பவளகாந்தம் அழகர்சாமிக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் அயராமல் செய்தித் துறையில் பணியாற்றியுள்ளார்.

1985ஆம் ஆண்டில் பகுதி நேரச் செய்திப் படைப்பாளராகத் துறையில் காலடி எடுத்து வைத்தார். அன்றிலிருந்து அவர் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தில் தமக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளார்.

இது அவரது முதல் பிரதான விழா விருது அல்ல. 2002, 2004 ஆகிய ஆண்டுகளில் சிறந்த செய்திப் படைப்பாளர் விருதை அவர் வென்றார்.

தேசிய தின அணிவகுப்பு, பொதுத் தேர்தல், நடப்பு விவகாரப் பிரிவின் 'எதிரொலி' நிகழ்ச்சி ஆகியவற்றையும் பல ஆண்டுகளாகப் படைத்து வந்தார்.

அதைத் தவிர அவர் முக்கியப் பிரமுகர்கள், அமைச்சர்கள், சமூகத் தலைவர்காள் ஆகியோருடனும் நேர்காணல்கள் நடத்தியிருக்கிறார்.

திருமதி பவளகாந்தம் அதிகாரபூர்வமாக ஓய்வுபெற்றுவிட்டாலும் பணிபுரிவதைச் சற்றும் நிறுத்தவில்லை.

செய்தியறையில் சேரும் அடுத்தத் தலைமுறை செய்தியாளர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டுகிறார்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்