Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சம்பளம் கிடைப்பதில் பிரச்சினையா? நிபுணர்கள் ஆலோசனை

இது பற்றிய விவரங்களை வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவன இயக்குநர் மதுசூதனன் அரவிந்திடம் கேட்டறிந்தது செய்தி.

வாசிப்புநேரம் -

மாதக் கடைசியாகியும் இன்னமும் முழு சம்பளம் வரவில்லையா?

கொடுக்கப்பட்ட ரசீதில் விவரங்கள் சரியாக இல்லையா?

2016ஆம் ஆண்டிலிருந்து அனைத்து ஊழியர்களுக்கும் விவரப் பட்டியலோடு சம்பள ரசீது கொடுக்க வேண்டும் என்பதை மனிதவள அமைச்சு கட்டாயமாக்கியுள்ளது.

இது பற்றிய விவரங்களை வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவன இயக்குநர் மதுசூதனன் அரவிந்திடம் கேட்டறிந்தது செய்தி.

  • வங்கிக் கணக்கில் சம்பளம் போடப்பட்ட 7 நாட்களுக்குள் ஊழியருக்கு நிறுவனம் ரசீதை வழங்க வேண்டும்.
  • சம்பளம் ஊழியரின் வங்கிக் கணக்கில் போடப்பட வேண்டும்.
  • கையில் பெறப்படும் சம்பளத்துக்கான ரசீதில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.
  • பெறப்படும் தொகையும் ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையும் ஒத்துப்போகவேண்டும்.

ரசீதில் முறைகேடுகளோ சம்பளத்தின் தொடர்பில் பிரச்சினையோ எழுந்தால் ஊழியர்கள் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணி (Tripartite Alliance for Dispute Management) அல்லது ஊழியர்களுக்கான சங்கத்திடம் புகார் கொடுக்கலாம்.

புகார் கொடுக்கச் செலுத்த வேண்டிய கட்டணம் :
சம்பள பாக்கி பத்தாயிரம் வெள்ளிக்கும் கீழ் இருந்தால்

> $10

பத்தாயிரம் வெள்ளிக்கும் மேல் இருந்தால்

> $20

  • முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வைக் காரணம் காட்டி ஊதியம் பெறுவதையோ ரசீது வழங்குவதையோ தள்ளிப் போடக்கூடாது.
  • சம்பள ரசீதைப் பத்திரமாக வைத்துக்கொள்வது முக்கியம்.
  • ரசீதில் உள்ள விவரங்கள் துல்லியமாக இருக்க வேண்டும்.
  • வேலை கிடைக்கும் அல்லது நிலைக்க வேண்டும் என்பதற்காகச் சம்பளத்தை மாற்றி எழுதுவதற்கு ஒத்துக்கொள்ளக்கூடாது.
  • கையெழுத்துப்போடுவதற்கு முன்னர் விவரங்களைக் கவனிப்பது சிறந்தது.
(படம்: Pixabay)


ஊதிய ரசீதில் என்ன குறிப்பிட்டிருக்க வேண்டும்?

  1. நிறுவனத்தின் முழுப் பெயர்.
  2. ஊழியரின் முழுப் பெயர்.
  3. எந்த மாதத்துக்கான சம்பளம் என்பதைத் தெளிவாகத் தேதிகளோடு குறிப்பிட்டிருக்க வேண்டும்.
  4. அடிப்படைச் சம்பளம் : மணிக்கு இவ்வளவு தொகை என்று சம்பளம் பெறுவோரின் ரசீதில் ஒரு மணி நேரத்துக்கான தொகை எவ்வளவு என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  5. வழக்கமான வேலை நேரத்தைவிட கூடுதல் வேலை நேரமும் அதற்கான தொகையும்.
  6. போக்குவரத்து, கைத்தொலைபேசிக்கான தொகையை நிறுவனம் வழங்கினால் அதனையும் ரசீதில் குறிப்பிட வேண்டும்.
  7. போனஸ் தொகை
  8. மத்திய சேமநிதி, அறநிறுவனம் போன்றவற்றுக்காகக் கழிக்கப்படும் தொகை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்