Skip to main content
PCF கனிவன்பு வாரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

PCF கனிவன்பு வாரம் - $45,000 பற்றுச்சீட்டுகள்

வாசிப்புநேரம் -
PCF கனிவன்பு வாரம் - $45,000 பற்றுச்சீட்டுகள்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனத்தின் கனிவன்பு வாரம் தொடங்கியுள்ளது.

அதன்கீழ் 45,000 வெள்ளிக்கு அதிகமான மதிப்புடைய மளிகைப்பொருள் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

சுமார் 780 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு அது உதவும்.

சிங்கப்பூரில் ஒவ்வொரு தலைமுறையும் ஆற்றியுள்ள பங்கை அங்கீகரிக்கவேண்டும்.

நாட்டின் வரலாற்றையும் கலாசாரத்தையும் கொண்டாடவேண்டும் என்ற நோக்கத்தில் அறநிறுவனம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதி அது.

ஆண்டுதோறும் நடைபெறும் முயற்சியில் மாணவர்கள், ஊழியர்கள், தொண்டூழியர்கள் எனச் சுமார் 35,000 பேர் பங்கேற்பர்.

வாரம் முழுதும் நடைபெறும் நடவடிக்கைகளில் PCF Sparkletots பாலர் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்வர்.

மூத்தோரைச் சந்திப்பது, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது, உணவு விநியோகிப்பது முதலியவற்றில் அவர்கள் ஈடுபடவிருக்கின்றனர்.

அனைவரையும் உள்ளடக்கிய, அனைவர் மீதும் அக்கறை கொண்ட சமூகத்தை உருவாக்குவது நோக்கம்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்