Skip to main content
8,000 பேருக்குப் பயிற்சி, $20 மில்லியன் ஒதுக்கும் PCF Sparkletots
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

8,000 பேருக்குப் பயிற்சி, $20 மில்லியன் ஒதுக்கும் PCF Sparkletots

வாசிப்புநேரம் -
8,000 பேருக்குப் பயிற்சி, $20 மில்லியன் ஒதுக்கும் PCF Sparkletots

(கோப்புப் படம்: Jeremy Long/ CNA)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 11 Oct 2026 05:36PM புதுப்பிப்பு : 11 Oct 2026 06:10PM
PCF Sparkletots பாலர் பள்ளி நிறுவனம் ஊழியர்களின் திறன் மேம்பாட்டு நிதியை இரட்டிப்பாக்குகிறது.

அடுத்த மூவாண்டில் சுமார் 8,000 கல்வியாளர்களுக்குப் பயிற்சியளிக்க அது 20 மில்லியன் வெள்ளியை ஒதுக்குகிறது.

ஆசிரியர்களின் நிர்வாகச் சுமையைக் குறைத்து, கற்றல் தேவையுள்ள மாணவர்களுக்கான ஆதரவை வலுப்படுத்த விரும்புகிறது PCF Sparkletots பாலர் பள்ளி.

மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் 40ஆம் ஆண்டை நிறைவு செய்யும் வேளையில் PCF Sparkletotsஇன் மேம்பாட்டு முயற்சி பற்றி அறிவிக்கப்பட்டது.

பாலர் பள்ளிக் கல்வியாளர்கள் அதிகமானோர் நிபுணத்துவ ஆற்றல், தலைமைத்துவம், மின்னிலக்கத் திறன் ஆகியவற்றை மெருகேற்றிக் கொள்ளக் கூடுதல் முதலீடு வழியமைக்கும்.

நல்ல ஆசிரியர்கள் பிள்ளைகளின் கற்றல் பயணத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்று தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) கூறினார்.

ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் வழிகளையும் PCF Sparkletots ஆராய்கிறது.

சீருடைகளைப் பெறுவதற்காக கோரிக்கைகள், பிள்ளைகளுக்கான தின்பண்டங்களைப் பெறுவதை ஒருங்கிணைப்பது முதலிய வேலைகளை இனி தனிப்பட்ட குழுவினர் கையாள்வர்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்