Skip to main content
ஆட்குறைப்பை அறிவிக்கத் தவறும் நிறுவனங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆட்குறைப்பை அறிவிக்கத் தவறும் நிறுவனங்கள் - என்ன தண்டனை?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) கட்டாய ஆட்குறைப்பு அறிவிப்பு விதிமுறையை மீறும் நிறுவனங்களுக்கு என்ன தண்டனை என்பதை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்தால்...

ஐந்து வேலை நாட்களுக்குள் மனிதவள அமைச்சுக்குக் கட்டாய ஆட்குறைப்பு அறிவிப்பை (Mandatory Retrenchment Notification) சமர்ப்பிக்க வேண்டும்.

முதல் முறை விதியை மீறுவதற்கு $1,000 அபராதமும், அடுத்தடுத்து வரும் மீறல்களுக்கு $2,000 அபராதமும் விதிக்கப்படும்.

பெரும்பாலான முதலாளிகள் கட்டாய ஆட்குறைப்பு அறிவிப்பின் விதிமுறையைக் கடைப்பிடிப்பதாக டாக்டர் டான் சொன்னார்.

2025ஆம் ஆண்டில்:

81 விழுக்காட்டு அறிவிப்புகள் ஐந்து வேலை நாள்களுக்குள் சமர்ப்பிக்கப்பட்டன.

2024ஆம் ஆண்டில்:

67 விழுக்காடு அறிவிப்புகள்தான் சமர்ப்பிக்கப்பட்டன.

அது ஒரு முன்னேற்றம் என சுட்டிக்காட்டினார் டாக்டர் டான்.

தாமதமான சமர்ப்பிப்புகள் பெரும்பாலும் நிர்வாகக் கவனக்குறைவால் ஏற்பட்டவை.

அறிவிப்பைத் தாமதமாகச் சமர்ப்பிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் வழங்கப்படுகின்றன.

பெரும்பாலானவர்கள் வருத்தம் தெரிவித்து, அதன் பின்னர் விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

விதிமுறையைப் பலர் தொடர்ந்து பின்பற்றுவதால் தண்டனைகளை இப்போதைக்குக் கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று டாக்டர் டான் தெரிவித்தார்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்