Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பென்குயின்களுக்குக் கண்புரை அறுவைச்சிகிச்சை....கால்நடை மருத்துவத் துறையில் புதிய மைல்கல்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பென்குயின்களுக்குக் கண்புரை அறுவைச்சிகிச்சை....கால்நடை மருத்துவத் துறையில் புதிய மைல்கல்

(படம்:Mandai Wildlife Group)

ஜூரோங் பறவைப் பூங்காவிலுள்ள (Jurong Bird Park) சில வயதான, 3 ராஜ, 3 ஹ்ம்போல்ட் பெங்குயின்களுக்கு கண்புரை அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பறவையினங்களின் கண்பார்வை மேம்பட்டுள்ளது.

கண்புரை என்பது வயதாகும்போது ஏற்படக்கூடிய வழக்கமான பிரச்சினை.

சிகிச்சையின்போது பென்குயின்களுக்குப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட உள்விழி வில்லைகள் பொருத்தப்பட்டன.

இது உலகில் பென்குயின்களை உட்படுத்திய முதல் அறுவைச்சிகிச்சையாகும்.

விலங்குகள் மத்தியில் தற்போது கண்புரை அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளும் நடைமுறை அதிகரித்துள்ளது. அது அவற்றின் பார்வையை மேம்படுத்தவும் உதவிவருகிறது.

விலங்குகள் பரமாரிப்புக் குழுவுடன் இணைந்து இந்த
அறுவைச்சிகிச்சையை நடத்த முடிவெடுக்கப்பட்டதாக மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் (Mandai Wildlife Group) கால்நடை மருத்துவர் டாக்டர் எலென் ரஸிடி (Dr Ellen Rasidi) சொன்னார்.

சிகிச்சைக்குப்பின் பென்குயின்கள் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கின்றன. இது அவற்றின் கண்பார்வை மேம்பட்டிருப்பதைக் காட்டுவதாக அவர் சொன்னார்.

வெற்றிகரமான இந்த அறுவைச்சிகிச்சை கால்நடை மருத்துவத்துறையில் புதிய மைல்கல் என The Eye Specialist for Animals மருந்தகத்தைச் சேர்ந்த கால்நடைகளுக்கான கண் மருத்துவர் டாக்டர் கிளாடிஸ் பூ (Dr Gladys Boo) கூறினார்.

மனிதர்களுக்கும் வீட்டில் வளரும் சில பாலூட்டி விலங்குகளுக்கும் விழி வில்லை மாற்று அறுவை சிகிச்சைகள் சகஜமானதுதான் என்றாலும் பென்குயின்களுக்கு இவைப் பயன்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்றார் அவர்.

அந்த விழிவில்லைகள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவை. ஒவ்வொரு பென்குயின்களின் கண்களின் அளவைப் பொறுத்து அவற்றைத் தயாரிக்க 2 மாதங்கள் ஆனதாகவும் திரு.கிளாடிஸ் சொன்னார்.

அறுவை சிகிச்சை முடிந்து 2 மாதங்களில் பென்குயின்கள் முழுமையாக உடல்நலம் தேறின.

பென்குயின்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கண்புரை அறுவைசிகிச்சையின் படங்களின் தொகுப்பு:

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்