Skip to main content
பறவைகளின் தொல்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பறவைகளின் தொல்லை - சமாளிக்க என்ன செய்யப்படுகிறது?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் பறவைகளின் தொல்லை குறித்து ஆண்டுதோறும் சராசரியாகச் சுமார் 22,000 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பறவைகளின் தொல்லையைக் கையாளவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் தேசியச் சுற்றுப்புற அமைப்பு, சிங்கப்பூர் உணவு அமைப்பு, நகர மன்றங்கள் ஆகியவற்றுடன் தேசியப் பூங்காக் கழகம் இணைந்து செயல்படுகிறது.

பறவைத் தொல்லை குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குத் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

புறாக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், மனிதர்கள் அவற்றுக்கு உணவு அளிப்பதைக் குறைக்க அமைப்புகள் முற்படுவதாக அவர் சொன்னார்.

அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கப் பொறி வைக்கப்படுவதையும் அவர் சுட்டினார்.

காகங்களின் தொல்லையைக் கையாளத் தேசியப் பூங்காக் கழகம் அவற்றின் கூடுகளைத் தொடர்ந்து அகற்றுவதாகத் திரு சீ கூறினார்.

காகங்களைச் சுடுவதைத் தொடரக் கழகம் சிங்கப்பூர்க் காவல்துறையுடன் அணுக்கமாய் செயல்படுவதாகவும் அவர் சொன்னார்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்