Pickleball - சத்தமில்லாமல்...
This audio is generated by an AI tool.
பிக்கல்பால் (Pickleball) விளையாட்டைச் சத்தமில்லாமல் எப்படி ஆடுவது?
விளையாடியே காட்டுகின்றனர், மவுண்ட்பேட்டன் வட்டாரக் குடியிருப்பாளர்கள்.
ஏனைய வட்டாரவாசிகளுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இவர்கள் சத்தமில்லாமல் விளையாடுகின்றனர்.
நுரைப் பலகையால் செய்யப்பட்ட இந்தப் பந்து, சாதாரணப் பிளாஸ்டிக் பந்தைக் காட்டிலும் 90 விழுக்காடு குறைவாகச் சத்தம் செய்கிறது.
மவுண்ட்பேட்டன் சமூக நிலையத்தில் சத்தமில்லாமல் விளையாடுவதற்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.
குறிப்பாக, குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் இது பொருத்தமாக இருக்கும்.
பிக்கல்பால் விளையாட்டுக்கு நிபுணத்துவ முறையில் பயிற்சி வழங்குவோர் இந்தச் சத்தம் ஏற்படுத்தாத புதிய பந்தை வரவேற்றுள்ளனர்.
ஆனால் மெல்லிய பந்தால் அதன் சுழற்சியும் வேகமும் பாதிக்கப்படலாம்.
ஆகவே வேகமாக ஆடும்போது அது காயங்களை ஏற்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இருப்பினும் இந்தப் புதிய வகைப் பிக்கல்பால் பந்தை விளையாடிப் பார்க்க இன்னும் கூடுதலானோர் முன்வருகின்றனர்.
இந்தச் சத்தமில்லாத பந்துகள் இப்போதைக்கு விற்பனையில் சுமார் ஐந்து விழுக்காட்டை வகிக்கின்றன.
வழக்கமான பிக்கல்பால் பந்துகளே தொடர்ந்து அதிகம் விற்கப்படுகின்றன என்கின்றனர் கடைக்காரர்கள்.