புறாக்களுக்கு ஓயாமல் உணவளித்த பெண்ணுக்கு $9,200 அபராதம்
வாசிப்புநேரம் -
(படம்: CNA/Syamil Sapari, Court documents)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
புக்கிட் பாத்தோக்கில் புறாக்களுக்கு ஓயாமல் உணவளித்த பெண்ணுக்கு 9,200 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் 78 வயது ரோகாயா அகமது (Rogayah Ahmad).
புறாக்களுக்கு உணவளிப்பதைத் தடுக்க முயன்ற தேசிய பூங்காக் கழக அதிகாரியை அவர் தாக்கியதாகவும் கூறப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை அதிகாரிகள் புக்கிட் பாத்தோக்கில் சோதனை நடத்தினர்.
ரோகாயா புறாக்களுக்குப் பப்பாளிப் பழம் கொடுப்பதைக் கவனித்த அதிகாரி அதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
ரோகாயா அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உணவளித்தார்.
இரண்டு நாளுக்குப் பிறகு அவர் மீண்டும் புறாக்காளுக்கு உணவளித்ததாகத் தெரிகிறது.
புறாக்களுக்கு உணவளிக்கக்கூடாது என்று அதிகாரி கூறியபோது ரோகாயா அவரது வயிற்றில் தாக்கினார்.
ரோகாயா அதிகாரியிடம் தகாத முறையில் பேசினார்.
இந்த ஆண்டு ஜனவரியில் ரோகாயா மீண்டும் புறாக்களுக்கு உணவளித்தது தெரியவந்தது.
அவர் இரண்டு முறை புறாக்களுக்கு உணவளித்ததாக ஒப்புக்கொண்டார்.
2021ஆம் ஆண்டில் அதுபோன்ற செயலுக்காக தனக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ரோகாயா கூறினார்.
ரோகாயாவுக்கு மறதி நோய் இருப்பதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.
அவர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை முழுமையாகச் செலுத்தினார்.

ஆதாரம் : CNA