Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பன்றியின் 30 கிலோகிராம் ரத்தக் கட்டி... சட்டவிரோதமாக விற்றவருக்கு அபராதம்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பன்றி ரத்தக் கட்டிகளை விற்ற பெண்ணுக்கு 8,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 30 கிலோகிராம் பன்றி ரத்தக் கட்டிகளுடன் யுவான் யிஃபான் (Yuan Yifan) என்ற பெண் அவரது வீட்டில் பிடிபட்டதாக நிறுவனம் தெரிவித்தது.

பன்றி ரத்தப் பொருள்களை அந்தப் பெண் இணையத்தில் விற்றது தெரியவந்தது. அத்தகைய விலங்கு ரத்த உணவுப்பொருள்களில் கிருமிகள் உருவாகி நோய்கள் எளிதில் பரவக்கூடும் என்று உணவு அமைப்பு குறிப்பிட்டது.

அசுத்தமான வழிகளில் விலங்கு ரத்தத்தைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அத்தகைய ஆபத்துகள் நேரலாம் என்பதை நிறுவனம் சுட்டியது.

சிங்கப்பூரின் தரநிலைகளுக்கேற்ப உணவுப்பொருள்கள் இறக்குமதி செய்யப்படவேண்டும் என்பதை உணவு அமைப்பு வலியுறுத்தியது. உரிமம் பெற்ற இறக்குமதியாளர்கள் மட்டுமே உணவுப்பொருள்களை சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யமுடியும் என்பதையும் அது நினைவூட்டியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்