Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாலையும் சரித்திரமும் - பிள்ளை ரோடு

சிங்கப்பூருக்கு வந்த முதல் இந்தியர் ஒருவரின் நினைவாக இந்தச் சாலைக்குப் பிள்ளை ரோடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கு வந்த முதல் இந்தியர் ஒருவரின் நினைவாக இந்தச் சாலைக்குப் பிள்ளை ரோடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாய லேபார் சாலைக்கு அருகில் அமைந்துள்ள பிள்ளை ரோடு யாரின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

1819ஆம் ஆண்டு ராஃபிள்ஸுடன் சிங்கப்பூரில் கால் பதித்தவர்களுள் திரு. நாராயண பிள்ளையும் ஒருவர். அவரை நினைவுகூரும் வகையில் 1957ஆம் ஆண்டில் இந்தச் சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டது.

அவர் பினாங்கிலிருந்து இங்கு வந்தார். சிங்கப்பூரில் செங்கல் சூளையை ஆரம்பித்தார். சிங்கப்பூரின் முதல் கட்டுமான ஒப்பந்தகாரராக இருநதார். இந்தியச் சமூகத்திற்கு அரும்பணியாற்றினார்.

(படம்: Wikimedia Commons)

சவுத் பிரிட்ஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தை அவர் 1827ஆம் ஆண்டில் கட்டினார். அதுவே சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோவில்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்