விமானப் பயணத்தின்போது திருட முயற்சி செய்வோரை எச்சரிக்கும் காவல்துறை
சிங்கப்பூரின் விமான நிலையக் காவல்துறை, விமானப் பயணத்தின்போது திருட முனைவோருக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆசிய-பசிஃபிக் வட்டாரத்தில் உள்ள விமான நிறுவனங்கள் அண்மை மாதங்களில் அத்தகைய சம்பவங்கள் உயர்ந்தது பற்றி அது அக்கறை தெரிவித்தது.
2023ஆம் ஆண்டு ஜனவரி முதல், கடந்த ஆண்டு செப்டம்பர் வரை, விமானத்தில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 4 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாகச் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
கடந்த ஆண்டு(2024) மார்ச் மாதம் நகை வியாபாரி ஒருவரிடம் இருந்து 120,000 வெள்ளிக்கு நிகரான தொகை களவாடப்பட்ட சம்பவமும் அதில் அடங்கும்.
அதுபோன்ற சம்பவங்களைக் கையாள்வதில் உள்ள சட்டச்சிக்கல்கள் சவாலாய் இருப்பதாக ஆசிய-பசிஃபிக் விமான நிறுவனங்கள் சங்கத்தின் தலைமை இயக்குநர் சுபாஸ் மேனன் (Subhas Menon) கூறினார்.
அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின்கீழ் விதிமுறைகள் இருந்தாலும் எல்லாச் சட்டத்துறைகளும் அதனைப் பின்பற்றுவதில்லை என்றார் அவர்.