Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காக்கி புக்கிட் வட்டாரத்தை மேம்படுத்த நீண்டகாலத் திட்டங்கள்

வாசிப்புநேரம் -
காக்கி புக்கிட் வட்டாரத்தை மேம்படுத்த நீண்டகாலத் திட்டங்கள்

(படம்: National Parks Board)

காக்கி புக்கிட் வட்டாரத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மேம்படுத்த நீண்டகாலத் திட்டங்கள் வரையப்படுகின்றன.

பாயா லேபார் ஆகாயப்படைத் தளம் 2030களில் அங்கிருந்து மாறும்போது அந்த இடத்தை இன்னும் நன்றாகப் பயன்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.

குடியிருப்பாளர்களுக்குக் கூடுதலான வசதிகளைக் கட்டித்தர முடியும் என்றார் அவர்.

காக்கி புக்கிட் வட்டாரம் 1980களில் கட்டப்பட்டது.

காலப்போக்கில் அங்கு வெவ்வேறு புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேம்படுத்தப்பட்டிருக்கும் சமூக நிலையம் இவ்வாண்டின் பிற்பாதியில் மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கும். 

அந்தத் தொகுதியின் 40ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் பேசிய திரு. வோங் இத்தனை மாற்றங்களுக்கு இடையிலும் மாறக்கூடாத ஒன்று, வலுவான சமூக உணர்வு என்றார்.

காக்கி புக்கிட்டின் வரலாற்றையும் குடியிருப்பாளர்களின் அனுபவங்களையும் நினைவுகூரும் புத்தகம் ஒன்றும் அறிமுகம் கண்டது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்