Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பானக் கலன்களை திரும்பக் கொடுக்கும் முனையங்களுக்கு நடமாட்டப் பிரச்சினை உள்ளோர் செல்லமுடியுமா?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், உலோகக் கேன்கள் (Can), பிளாஸ்டிக் போத்தல்களில் விற்கப்படும் பானங்களைக் குடித்துவிட்டுக் கலன்களைத் திரும்பக் கொடுக்கும் திட்டம் நடப்புக்கு வரவுள்ளது.

அதற்கான முனையங்களைக் குடியிருப்பாளர்கள் எளிதில் அணுகமுடியுமா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதலளித்த நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, போக்குவரத்து மூத்த துணையமைச்சர், ஏமி கோர், மூத்தோர், நடமாட்டப் பிரச்சினைகளைக் கொண்டோர் ஆகியோரின் சவால்களை அறிவதாய்க் குறிப்பிட்டார்.

அனைவரையும் உள்ளடக்கிய திட்டத்தை வடிவமைக்க அமைச்சு விரும்பவதாக டாக்டர் கோர் சொன்னார்.

நீடித்த நிலைத்தன்மை வளங்கள் மசோதாவின் கீழ், திரும்பக் கொடுக்கப்படும் பானக் கலன்களுக்கு 10 காசு கிடைக்கும்.

அதே மசோதாவின் கீழ் பேரங்காடிகளில் பெறப்படும் பொருள்களுக்கான பிலாஸ்டிக் பைகளுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்துவதும் பரிந்துரைகளில் ஒன்று.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்