"போட்டி அதிகரித்துள்ளது; வருமானம் குறைந்துவிட்டது" - உணவு விநியோகச் சேவை ஓட்டுநர்கள்
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: CNA/Raj Nadarajan)
உணவு விநியோகச் சேவைபுரியும் ஓட்டுநர்கள் கடந்த சில ஆண்டுகளில் அவர்களின் வருமானம் குறைந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
வெளிநாட்டவர் சட்டவிரோதமாக உணவு விநியோக ஓட்டுநராகச் செயல்படுவதால் போட்டி மேலும் கடுமையாகிவிட்டதாக அவர்கள் கூறினர்.
அந்தப் பிரச்சினையைக் கவனிக்க அரசாங்கம் முத்தரப்புப் பணிக்குழுவை அமைத்திருப்பதாகத் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் நேற்று முன்தினம் அறிவித்தது.
உணவு விநியோக ஓட்டுநராகச் சிங்கப்பூரர்கள் மட்டுமே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால் மற்ற நாட்டவரும் அதைச் செய்வதாகப் புகார் கூறப்படுகிறது.
போட்டியைக் குறைப்பதற்காக மட்டுமல்ல பயனீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை தேவை என்று உணவு விநியோக ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : Others