Skip to main content
நிச்சயமற்ற உலகச் சூழலில் சிங்கப்பூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நிச்சயமற்ற உலகச் சூழலில் சிங்கப்பூர்-இந்தியா உறவை வலுப்படுத்துவது முக்கியம்: பிரதமர் வோங்

வாசிப்புநேரம் -
நிச்சயமற்ற உலகச் சூழலில் சிங்கப்பூர்-இந்தியா உறவை வலுப்படுத்துவது முக்கியம்: பிரதமர் வோங்

FB/Lawrence Wong

வெளியீடு : 04 Sep 2025 09:21AM புதுப்பிப்பு : 04 Sep 2025 11:16AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இன்றைய நிச்சயமற்ற உலகச் சூழலில் சிங்கப்பூர்-இந்தியா உறவை வலுப்படுத்துவது முக்கியம் என்று புதுடில்லிக்கு வருகை தந்திருக்கும் சிங்கப்பூர்ப் பிரதமர் திரு லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

Hindustan Times நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அவர் சொன்னார்.

கடந்த 60 ஆண்டுகளாக நட்பு, நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவும் சிங்கப்பூரும் உத்திபூர்வப் பங்காளித்துவத்தைக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

ஒருமித்த கண்ணோட்டம் கொண்ட நாடுகளுடன் இணைந்து செயல்படப் போவதாகக் கூறிய திரு வோங், அதற்கான உத்தேசத் திட்டத்தைச் சிங்கப்பூர் வகுக்கும் என்றார்.

சிங்கப்பூரும் இந்தியாவும் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவப் (Comprehensive Strategic Partnership) பெருந்திட்டத்தை எப்படிச் செயல்படுத்தும்? அது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை எப்படி அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும்? போன்றவற்றைப் பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் திரு வோங் பேட்டியில் தெரிவித்தார்.

திரு வோங் இந்தியாவுக்கு 3 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்