Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புருணை இளவரசர் திருமணக் கொண்டாட்டத்தில் பிரதமர் லீ

வாசிப்புநேரம் -
பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) இந்த வார இறுதியில் புருணை செல்லவிருக்கிறார்.

புருணை இளவரசர் அப்துல் மதீன் (Abdul Mateen), அனிஷா ரோஸ்னா (Anisha Rosnah) திருமணக் கொண்டாட்டத்தில் அவர் கலந்துகொள்வார்.

சுல்தான் ஹசனல் போல்கியா (Hassanal Bolkiah) விடுத்த அழைப்பின்பேரில் பிரதமர் லீயும் அவரது மனைவி திருமதி ஹோ சிங்கும் (Ho Ching) புருணை செல்கின்றனர்.

மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹியென் (Teo Chee Hean), வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan) ஆகியோரும் திருமணக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வர்.

பிரதமர் லீ தம்பதியினர், புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவையும் அவரின் மனைவியையும் சந்தித்துப் பேசுவர்.

பிரதமர் லீ புருணை பயணத்தின்போது துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்